/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலையில் சோலார் பேனல் இருந்தும் விளக்கு இல்லை விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரிப்பு
/
நான்கு வழிச்சாலையில் சோலார் பேனல் இருந்தும் விளக்கு இல்லை விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரிப்பு
நான்கு வழிச்சாலையில் சோலார் பேனல் இருந்தும் விளக்கு இல்லை விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரிப்பு
நான்கு வழிச்சாலையில் சோலார் பேனல் இருந்தும் விளக்கு இல்லை விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரிப்பு
ADDED : ஏப் 06, 2024 05:18 AM

விருதுநகர் விருதுநகர் கவுசிகா நதியின் மீது நான்கு வழிச்சாலையில் பாலத்தில் அமைக்கப்பட்ட சோலார் பேனல் விளக்கு போதிய பராமரிப்பு இல்லாததால் விளக்கு சேதமாகி அகற்றப்பட்டு பல மாதங்களாகியும் புதிய விளக்கு பொருத்தப்படவில்லை.
விருதுநகர் - - மதுரை நான்கு வழிச்சாலை கவுசிகா நதி பாலத்திற்கு இருபுறமும் சர்வீஸ் ரோடு பாலங்கள் அமைக்கப்படவில்லை.
இதனால் நான்கு வழிச்சாலையில் எதிர்திசையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சர்வீஸ் ரோடுகள் இல்லாததால் இரவு நேரத்தில் எதிர்திசையில் வரும் வாகனங்களின் வருகையை அறிந்து அதற்கு தகுந்தவாறு வாகனத்தை இயக்க ஏதுவாக சோலார் பேனல் மின் விளக்குகள் பாலத்தில் அமைக்கப்பட்டது. இந்த சோலார் மின் விளக்குகளால் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் சென்றனர்.
ஆனால் இவை போதிய பராமரிப்பு இன்றி பாழானதால் விளக்குள் மட்டும் அகற்றப்பட்டு பல மாதங்களாகிறது. தற்போது வெறும் பேனல்கள் மட்டுமே கம்பத்தில் உள்ளது.
இதனால் வடமலை குறிச்சி செல்வதற்காக இரவு நேரத்தில் நான்குவழிச்சாலையில் மதுரை நோக்கி செல்லும் வாகனங்கள் எதிர்திசையில் வரும் வாகனங்களின் மீது மோதி விபத்து நிகழும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த பகுதியில் சர்வீஸ் ரோடு இல்லாததால் ஏற்கனவே பல விபத்துக்கள் நடந்து வரும் நிலையில் தற்போது இரவு வெளிச்சம் இல்லாமல் இன்னும் அதிக விபத்துக்கள் நிகழ்வதற்கு நெடுஞ்சாலைத்துறையே வழிவகை செய்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே புதிய சர்வீஸ் ரோடு பாலப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும், சோலார் பேனல் விளக்குகளை விரைந்து பொருத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

