/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் ஆடி அமாவாசை: 10 நாட்கள் அனுமதிக்க கோரிக்கை
/
சதுரகிரியில் ஆடி அமாவாசை: 10 நாட்கள் அனுமதிக்க கோரிக்கை
சதுரகிரியில் ஆடி அமாவாசை: 10 நாட்கள் அனுமதிக்க கோரிக்கை
சதுரகிரியில் ஆடி அமாவாசை: 10 நாட்கள் அனுமதிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 28, 2024 04:06 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வதற்கான நேரமும், நாட்களும் குறைக்க பட்டால் நெரிசல் ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பக்தர்களை 10 நாட்கள் அனுமதிக்க வேண்டும், என விஷ்வ ஹிந்து பரிஷத் தென்பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
சதுரகிரியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த ஆண்டுகளில் 10 நாட்கள் வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழி மிகவும் குறுகலாகவும், பால வசதிகள் இல்லாமலும் இருப்பதால் நெரிசல் ஏற்பட்டு அசம்பாவிதம் நிகழும் வாய்ப்புள்ளது.
வனத்துறையின் தாமதத்தால் பாலம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வனத்துறையினர் சேவை கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.
ஹிந்துக்களுக்கு எதிராகவே ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்களை கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும். ஆடி அமாவாசை தரிசனம் செய்ய 10 நாட்கள் அனுமதி வழங்க வேண்டும், என்றார்.