/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் உடை கல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
/
சாத்துாரில் உடை கல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
சாத்துாரில் உடை கல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
சாத்துாரில் உடை கல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
ADDED : மே 23, 2024 02:43 AM
சாத்துார்: சாத்துாரில் உடைகல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம் உள்ளது.
தாயில்பட்டி, வெம்பக்கோட்டை பகுதிக்கு சாத்துார் வழியாக டாரஸ் லாரிகளில் அதிகளவில் கட்டுமான பணிக்கான உடைகற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த உடை கல் ஏற்றி வரும் லாரிகளின் பாடிஉயரத்திற்கும் மேலாக கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன.
சாத்துார் தாயில்பட்டி ரோட்டில் 3 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. உடை கற்களை அதிக உயரத்திற்கு ஏற்றி வரும் லாரிகள் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கற்கள் குலுங்கி ரோட்டில் விழும் நிலை உள்ளது.
பெரிய அளவிலான உடை கல் லாரியில் இருந்து தவறி ரோட்டில் விழுந்தால் பின்னால் வரும் வாகனம் விபத்திற்குள்ளாகும். அல்லது ரோட்டில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது விழுந்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் அதிக உயரத்தில் உடை கல் ஏற்றி வரும் லாரிகளை எச்சரிக்காமல் கண்டும் காணாமல் உள்ளனர். உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பாக போலீசார் அதிக உயரத்தில் உடை கல் ஏற்றி வரும் லாரிகளை எச்சரித்து விபத்து நேரிடும் முன் தடுக்க வேண்டும்.

