/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டியவர் மீது நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
/
செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டியவர் மீது நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டியவர் மீது நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டியவர் மீது நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
ADDED : ஏப் 08, 2024 04:50 AM
விருதுநகர் : விருதுநகரில் வாகனத்தில் இருந்து மனித கழிவுகளை கொட்டிய ஆதவன் செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று பொது இடத்தில் செப்டிக் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்ட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தில் கழிவுநீர் உந்துநிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என்ற விதிகள் உள்ளன.
மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் 45 செப்டிக் டேங்க் நீர் அகற்றும்வாகனங்கள் அனுமதி பெற்றுள்ளன. இதில் சூர்யா என்பவருக்கு சொந்தமான ஆதவன் செப்டிங் டேங்க் கிளினிங் என்ற பெயருடன் கூடிய லாரி ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன வகை மாற்றம் அனுமதி பெற்றுள்ளது. ஆனால் செப்டிக் டேங்க் கழிவு கொட்டுவதற்கான உரிமத்தை ஸ்ரீவி., நகராட்சியில் பெறவில்லை. நேற்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியின் பின்புறம் இந்த லாரி கழிவுகளை கொட்டிய நிலையில், லாரி உரிமையாளர் சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சட்ட விதிகளுக்குப் புறம்பாக கழிவு நீரகற்றும் பணிகளை செய்வோர் மீதும், திறந்தவெளி, நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றுவோர் மீதும் வழக்கு பதிந்து, சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

