/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அ.தி.மு.க., வேட்பாளர் வாகனம் சோதனை
/
அ.தி.மு.க., வேட்பாளர் வாகனம் சோதனை
ADDED : ஏப் 17, 2024 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள், திருச்சுழி சட்டசபை தொகுதி வீரசோழன் பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் காரில் சென்றனர்.
அப்போது மானாசாலை செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கணேசன் தலைமையில் அலுவலர்கள் காரை சோதனை செய்தனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அ.தி.மு.க., வேட்பாளர் காரை விட்டு கீழே இறங்கினார். அவருடன் சென்ற அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கப்பட்டனர்.

