ADDED : மே 15, 2026 11:33 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் கே.ஆர்.ஏ.கே.பி.எஸ் மருத்துவமனையில் நேற்று நடந்த நிறுவனர் தின விழாவை முன்னிட்டு டாக்டர் ரத்தினவேலின் பசுமைச் சேவையை நினைவுகூரும் வகையில் ஆண்டு முழுவதும் தினமும் பத்து மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதில் டாக்டர் விவேக், டாக்டர் நிகில் ஆகியோர் பங்கேற்று கூறியதாவது: 365 நாட்கள் தினசரி 10 மரங்கள் கொடுக்கப்படும். எங்கள் மருத்துவமனை இதை ஆயுள் முழுவதும் செய்யும். 10 ஆண்டுகளில் 36,500 மரங்கள் நட்டிருப்போம். நாங்கள் பயன்படுத்தும் பேப்பர், இன்ஜெக்ஷன் பிளாஸ்க்டிக், பயோ பிளாஸ்டிக் போன்றவை இயற்கை வளங்களில் இருந்து எடுக்கிறோம். அதை இயற்கைக்கே திரும்பி கொடுக்கும் முயற்சியில் மரக்கன்று வழங்கும் சேவையை துவங்கி உள்ளோம், என்றனர்.
