/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்காச்சோளத்தில் மகசூல் அதிகரிக்க ஆலோசனை
/
மக்காச்சோளத்தில் மகசூல் அதிகரிக்க ஆலோசனை
ADDED : ஆக 06, 2024 04:21 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மக்காச்சோளத்தில் மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து வல்லுனர்கள் ஆலோசனை கூறினர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ், உதவி பேராசிரியர் வேணுதேவன் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2023 ல், கோ.எச்.எம் 11, என்ற ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒட்டு ரகம் 15 முதல் 110 நாட்கள் வயது உடையது. ஆடி, புரட்டாசி, தை பட்டத்திற்கு ஏற்ற ரகம். மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற தானியம் உடையது. குறிப்பாக வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது.
விருதுநகர் மாவட்டத்திற்கு ஏற்றது. நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. உளுந்து, பாசி பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மக்காச்சோள மேக்சிமை தண்ணீரில் கலந்து கதிர் உருவாகும் நேரத்தில் இலை வழியாக தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது மணி பிடிக்கும். திறன் அதிகரிக்கும். விளைச்சல் 20 சதவிகிதம் வரை கூடும். வறட்சியை தாங்கும் திறன் அதிகரிக்கும் என, தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினர்.