/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும்'
/
'அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும்'
ADDED : மார் 23, 2024 04:59 AM
அருப்புக்கோட்டை: அனைத்து வாகனங்களையும், டூ வீலர் உட்பட முற்றிலுமாக சோதனை செய்ய வேண்டும் என, தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், விருதுநகர் லோக்சபா தொகுதி தேர்தல் பார்வையாளர் ஜார்ஜ் அறிவுறுத்தினார்.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ ., அலுவலகத்தில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு விருதுநகர் லோக்சபா தொகுதி தேர்தல் பார்வையாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ. வள்ளிக்கண்ணு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பார்வையாளர் கூறுகையில், தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து வாகனங்களையும் குறிப்பாக டூவீலர்களை முற்றிலுமாக பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், விலை உயர்ந்த பொருட்கள் பற்றி உடன் மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்ய வேண்டும், என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், தாசில்தார் செந்திவேல், வருவாய்த்துறை அலுவலர்கள் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

