ADDED : ஏப் 29, 2024 04:59 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியில் 1971 ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த முன்னாள் மாணவர்கள் குடும்ப விழா நடந்தது.
முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர். அதில் பலர் டாக்டர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், வியாபாரிகளாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். விழாவிற்கு தொழிலதிபர் சுதாகர் தலைமை வகித்தார்.
முன்னாள் மாணவர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தாங்கள் குடும்பத்தார்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்தனர்.
