ADDED : செப் 10, 2024 04:49 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர்,: ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற திரு. வி. க. பள்ளியில் 1987 முதல் 92 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி,ஆசிரியர்கள் சத்தியபாமா, ஜெயலட்சுமி, அமல்ராஜ் பங்கேற்று பேசினர். ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சால்வைகள் அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் ஆசீர்வாதம் பெற்றனர். ஆசிரியர்கள் சார்பாக மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை ஆசிரியை ஜெயலட்சுமி வழங்கினார்.
32 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த, 45 நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசி மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் குமார், பாலாஜி, நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
