ADDED : ஆக 01, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம், ஜூலை 28-
ராஜபாளையம் பி.ஏ.சி. ஆர் பாலிடெக்னிக் கல்லுாரியில் 1976ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
முன்னாள் மாணவர் சங்க தலைவர் சந்திரசேகர் ராஜா வரவேற்றார். சிறப்பு விருதுநராக சென்னை என்மாஸ் நிர்வாக இயக்குனர் வெங்கடசாமி பங்கேற்றார். கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், ஆசிரியர்கள் வாழ்த்தினர். விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்கள் நினைவுகளை பகிர்ந்தனர். சங்க துணை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ரவீந்திரன், பூமாலை செய்தனர்.
