ADDED : ஆக 06, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஆக 7-
கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரியில் 1997- 2001 கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு பல்கலைக்கழகத்தில் துணைத் தலைவர் சசி ஆனந்த் தலைமையில் நடந்தது.
பல்வேறு நாடுகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று, துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், மூத்த பேராசிரியர்கள் சரவணசங்கர், தேவராஜ், ஸ்ரீகுமார் ஆகியோருடன் கலந்துரையாடினர். முன்னாள் மாணவர்கள் சார்பில் மூன்று மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை ராஜேஷ் பிரபு, அனிதா, வேல்முருகன், அனுராதா வழங்கினர்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முருகேஸ்வரி, துணைத் தலைவர் தனலட்சுமி மற்றும் பத்ரிநாத், கைலாசம், பாலமுருகன் முன்னாள் மாணவர்கள் சஞ்சீவிகுமார், விஜய் செய்திருந்தனர்.
