நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவர் விடுதியில் ராம்கோ குரூப், பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் அறக்கட்டளை சார்பில் மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆண்டு விழா நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில்: மாவட்டத்தில் ராஜபாளையம், வத்திராயிருப்பு வட்டங்களில் நான்கு இடங்களில் பழங்குடியினர் மக்கள் வசிக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பான புள்ளி விவரங்கள் படி தற்போது பள்ளி படிப்பு முடித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது, என்றார்.
ராம்கோ குழும நிர்வாக இயக்குனர் நிர்மலா ராஜா, அறக்கட்டளை நிர்வாகிகள், பழங்குடியின மாணவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.