/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புது பஸ் ஸ்டாண்டிற்கான வழித்தட மாறுதல்கள் அறிவிப்பு
/
புது பஸ் ஸ்டாண்டிற்கான வழித்தட மாறுதல்கள் அறிவிப்பு
புது பஸ் ஸ்டாண்டிற்கான வழித்தட மாறுதல்கள் அறிவிப்பு
புது பஸ் ஸ்டாண்டிற்கான வழித்தட மாறுதல்கள் அறிவிப்பு
ADDED : மார் 10, 2025 04:29 AM
விருதுநகர்: விருதுநகர் காமராஜர் புது பஸ் ஸ்டாண்டிற்கான வழித்தட மாறுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 9 முதல் ஓட்டல் பஸ் ஸ்டாப் முதல் ஆத்துப்பாலம் வரை பயணிகள் பஸ் நோ என்ட்ரீ ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நகரில் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் நகரின் மேற்கு, தெற்கு பகுதியில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் ஓட்டல் பஸ் ஸ்டாப் சர்வீஸ் ரோடு, எம்.ஜி.ஆர் சாலை வழியாக காமராஜர் புது பஸ் ஸ்டாண்ட் வந்து, அங்கிருந்து கோவில்பட்டி மார்க்கமாக செல்லும் பஸ்கள் எம்.ஜி.ஆர் சாலை வழியாகவும், மதுரை செல்லும் பஸ்கள் எம்.ஜி.ஆர் சிலை ஆத்துப்பாலம் டி.டி.கே ரோடு வழியாகவும், அருப்புக்கோட்டையில் இருந்து ராஜபாளையம் செல்லும் அனைத்து பஸ்களும் கருமாதி மடம், புது பஸ் ஸ்டாண்ட், எம்.ஜி.ஆர் சாலை வழியாகவும், ராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் பஸ்கள் எம்.ஜி.ஆர் சாலை வழியாக, புது பஸ் ஸ்டாண்ட் வந்து கருமாதி மடம் வழியாக அருப்புக்கோட்டை பாலம் வழியாகவும், பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் அனைத்து பஸ்களும் கருமாதி மடம், ஆத்துப்பாலம், டி.டி.கே ரோடு வழியாக செல்ல வேண்டும்.
பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் அனைத்து பஸ்களும், மீனாம்பிகை பங்களா வழியாக வரும் மதுரை - சிவகாசி பஸ்களும் டி.டி.கே ரோடு, ஆத்துப்பாலம், கருமாதி மடம் வழியாக புது பஸ் ஸ்டாண்ட் வந்து, அங்கிருந்து மேற்கு, தெற்கு செல்லும் பஸ்கள் எம்.ஜி.ஆர்., சாலை வழியாக செல்ல வேண்டும். கிழக்கு பகுதிக்கு செல்லும் அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பஸ்கள் கருமாதி மடம், பாலம் வழியாக செல்ல வேண்டும்.இதனால் புது பஸ் ஸ்டாண்ட் சிறப்பாக செயல்படவும், விபத்துக்களை தடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் முடியும்.
சிவகாசி முதல் விருதுநகர் மார்க்கம் நகர் பஸ்களில் சிவகாசியில் இருந்து விருதுநகர் வரும் பஸ்கள் ஓட்டல் பஸ் ஸ்டாப், புறவழிச்சாலை, எம்.ஜி.ஆர் சாலை, புது பஸ் ஸ்டாண்ட், கருமாதி மடம், ஆத்துப்பாலம், டி.டி.கே ரோடு, மீனாம்பிகை பங்களா பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று, மீண்டும் அதே வழியாக சிவகாசி செல்ல வேண்டும்.
சாத்துார் முதல் வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை முதல் வத்திராயிருப்பு மார்க்கம் செல்லும் புறநகர் பஸ்களில் வத்திராயிருப்பில் இருந்து விருதுநகர் வழியாக சாத்துார் செல்லும் பஸ்கள் கணபதி மில், எம்.ஜி.ஆர் சாலை, புது பஸ் ஸ்டாண்ட், கருமாதி மடம், ஆத்துப்பாலம், டி.டி.கே ரோடு வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று மீண்டும் அதே வழியாக திரும்ப செல்ல வேண்டும். இதன்படியான வழித்தட மாறுதல்கள் நேற்று முதல் அமல்படுத்துவதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.