/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாஜி அமைச்சருக்கு எதிராக மற்றொரு போஸ்டர்
/
மாஜி அமைச்சருக்கு எதிராக மற்றொரு போஸ்டர்
ADDED : மார் 13, 2025 02:48 AM

விருதுநகர்,:விருதுநகரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்ட மேடையில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கன்னத்தில் அறை வாங்கிய நந்தகுமாருக்கு ஆதரவாகவும், மாஜி., மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
விருதுநகரில் மார்ச் முதல் வாரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடந்தது.
இந்த விழா மேடையில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த எம்.ஜி.ஆர்., மன்ற அணி நிர்வாகி நந்தகுமாரை, ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார்.
நந்தகுமார் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
மறுநாள் பாண்டியராஜன் பேசிய ஆடியோ வெளியானது, அதற்கு பதிலடியாக அவரை பெயரை குறிப்பிடாமல் தனிப்பட்ட முறையில் ராஜேந்திரபாலாஜி தாக்கி பேசினார். இருதரப்பு மோதல் அதிகரித்தது.
மேலும் மார்ச் 10ல் காமராஜ் நாடார் சமூக அறக்கட்டளையினர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக விருதுநகர், சிவகாசியில் போஸ்டர் ஒட்டினர்.
இந்த பிரச்னை முடிவுக்கு வருவதற்குள் நேற்று காலையில் நந்தகுமாருக்கு ஆதரவாகவும், ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.