ADDED : ஏப் 03, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரியில் கல்லூரி மாணவிகளுக்கு உளவியல் சார்ந்த விழிப்புணர்வை மேம்படுத்தும் விதமாக கேலி வதை தடுப்புக் குழு கூட்டம் நடந்தது. முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். பேராசிரியை ஜெயந்தி முன்னிலை வகித்தார்.
பேராசிரியை ஹேமலதா வரவேற்றார். திருச்சுழி அரசு மருத்துவமனையில் உள்ள நம்பிக்கை மையத்தின் ஆலோசகர் விஜயலட்சுமி கலந்து கொண்டு, 'மன உளவியல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசினார். மாணவிகளின் மனம், உடல் ரீதியான பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

