ADDED : மே 29, 2026 11:03 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், மே 30–
அருப்புக்கோட்டை கல்லுாரணி முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த சீனிவாசகன், கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்த மனு: எனது இரு கண்களின் பார்வையிலும் குறைபாடு உள்ளது. சாதாரண மனிதர்களைப் போல் அனைத்து வேலையையும் செய்ய முடியாது.எனவே மாற்றுத் திறனாளி அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்தேன். என்னை பரிசோதித்த டாக்டர் நுாறு சதவீதம் ஊனம் உள்ளது என சான்று, அடையாள அட்டை வழங்கியுள்ளனர். உதவித் தொகை கோரி 2023 செப். ல் விண்ணப்பித்தேன். ஆனால் தற்போது வரை உதவித் தொகை வழங்கப்படவில்லை. எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுள்ளார்.
