ADDED : ஏப் 29, 2024 05:08 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் நான்காம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும்போதே, வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் கவுரவிக்கும் வகையில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி பங்கேற்று, வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பாராட்டி, சான்றிதழ், பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியை கல்லுாரியின் நிர்வாகம் சார்பாக கல்லுாரி துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் தர்மராஜன், பொருளாளர் ஸ்ரீமுருகன், துணைச்செயலாளர் முருகன், முதல்வர் செந்தில் பங்கேற்றனர்.
