ADDED : ஜூலை 10, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 11-
தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை சார்பில் வட்டார அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இதில் ஸ்ரீவில்லிபுத்துார் வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 19 வயதிற்குட்பட்டோருக்கான இரட்டையர் பிரிவில் மாணவிகள் மகாலட்சுமி, அனுஷா முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதேபோல் 14 வயதுக்குட்போருக்கான இரட்டையர் போட்டியில் மாணவர்கள் டான் ரோகித், நிதீஷ் குமார் முதலிடம் பிடித்தும், 17 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவர் சந்தோஷ் குமார் முதலிடம் பெற்றனர்.
சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் சிவகுமாரன், முதல்வர் சரவணராஜன், நிர்வாக அலுவலர் சந்தானம், ஆசிரியர்கள் ஜெயக்குமார், சந்தான லட்சுமி பாராட்டினர்.
