/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'தேர்தலில் ஆர்வம் இல்லையா': தேர்தல் பார்வையாளர் கேள்வி
/
'தேர்தலில் ஆர்வம் இல்லையா': தேர்தல் பார்வையாளர் கேள்வி
'தேர்தலில் ஆர்வம் இல்லையா': தேர்தல் பார்வையாளர் கேள்வி
'தேர்தலில் ஆர்வம் இல்லையா': தேர்தல் பார்வையாளர் கேள்வி
ADDED : ஏப் 04, 2024 11:41 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் தேர்தல் ஆர்வம் இல்லாமல் இருப்பது ஏன் என பொது மக்களிடம் தேர்தல் பொது பார்வையாளர் கேள்வி எழுப்பினார்.
அருப்புக்கோட்டையில் உள்ள பூத்துகளை பார்வையிட விருதுநகர் லோக்சபா தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் லக்கா ஆய்வு செய்தார். தெற்கு பகுதியில் தனியார் பள்ளியில் ஆய்வு செய்து விட்டு வெளியில் வந்தவர் அங்கிருந்த மக்களிடம், ஏன் தேர்தல் ஆர்வம் இல்லாமல் இருக்கிறீர்கள் நகரில் எந்தவித ஆரவாரம் இன்றி உள்ளது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பொதுமக்கள், லோக்சபா தேர்தல் அப்படித்தான் இருக்கும். சட்டசபை தேர்தல் என்றால், தான் தொகுதி வேகமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என பதில் கூறினர். இதை கேட்டு, அப்படியா என சிரித்தவாறு பார்வையாளர் சென்றார்.