ADDED : ஜூலை 16, 2026 06:53 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பிரச்னை குறித்து மனு கொடுக்கும் போது இ.கம்யூ கட்சியினருக்கும், நகரமைப்பு அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நகரில் நிலவும் குடிநீர் பிரச்னையை கண்டித்து இ.கம்யூ கட்சி சார்பில் நேற்று காலை 11:00 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இ.கம்யூ முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, கட்சி நிர்வாகிகள் மகாலிங்கம் கோவிந்தன், மூர்த்தி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க கட்சியின் சென்றனர். கமிஷனர் குமார் விடுமுறையில் இருந்ததால் நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் மனுவை பெற்றார்.
கோரிக்கை மனுவை கொடுத்து ராமசாமி பேசும்போது, நகரமைப்பு அலுவலர் அளித்த பதில் திருப்தி இல்லாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர்.
