/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெள்ளக்காடாக மாறும் அருப்புக்கோட்டை :அலட்சியத்தால் அல்லல்
/
வெள்ளக்காடாக மாறும் அருப்புக்கோட்டை :அலட்சியத்தால் அல்லல்
வெள்ளக்காடாக மாறும் அருப்புக்கோட்டை :அலட்சியத்தால் அல்லல்
வெள்ளக்காடாக மாறும் அருப்புக்கோட்டை :அலட்சியத்தால் அல்லல்
ADDED : ஆக 26, 2024 05:49 AM
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் வாறுகால்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சிறிய மழை பெய்தால் கூட நகர் முழுவதும் வெள்ள காடாக மாறிவிடுகிறது.
அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் மதுரை ரோடு, விருதுநகர் ரோடு, பந்தல்குடி ரோடு, திருச்சுழி ரோடு உட்பட ரோடுகளின் இரு புறமும் மெயின் வாறுகால்கள் உள்ளன. இவை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், ஒரு சில பகுதிகளில் இடிந்தும், அடைபட்டும், தூர்வாரப்படாமல் உள்ளது. இவற்றை பராமரிக்காமல் விட்டதால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வாறுகால்கள் சுருங்கி விட்டன.
இதனால் நகரில் சிறிய மழை பெய்தால் கூட, மழை வெள்ளம் வெளியேற முடியாமல் ரோட்டிலேயே தேங்கி கிடக்கிறது. விருதுநகர் ரோடு, திருச்சுழி ரோடு, காந்தி நகர் பகுதிகளில் வெள்ளம் தேங்கி விடுகிறது.
நெடுஞ்சாலை துறையினர் முக்கியமான ரோடுகளின் அருகில் உள்ள மெயின் வாறுகால்களை அகலப்படுத்தி மழை வெள்ளம் சீராக செல்லும் வகையிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும் புதியதாக அமைக்க வேண்டும்.

