/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டைக்கு புதிய ரயில் பாதை வேண்டும்; மதுரை-துாத்துக்குடி நெரிசலை குறைக்கலாம்

ADDED : செப் 03, 2024 04:52 AM
மதுரை : 'மத்திய அரசின் 2011 --12 ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி, மதுரை -- அருப்புக்கோட்டை- துாத்துக்குடி புதிய அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்' என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் மதுரையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மதுரை -- துாத்துக்குடிக்கு அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில்பாதை அமைத்தால் சென்னை - மதுரை - துாத்துக்குடி வழித்தடத்தில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். துாத்துக்குடி துறைமுகத்திற்கு அதிகளவில் சரக்கு ரயில்கள் செல்ல முடியும். தொழில், பொருளாதார மேம்பாட்டில் பின்தங்கிய அருப்புக்கோட்டை பகுதிகளில் தொழில், பொருளாதார வளர்ச்சி பெறவும் இந்த ரயில் வழித்தடம் உதவும்.
மேலும் துாத்துக்குடி, கொச்சி அல்லது மங்களூர் உட்பட முக்கிய மேற்கு துறைமுகங்களுக்கு இடையே ரயில் இணைப்பும் கிடைக்கும். ஆனால் பட்ஜெட்டில் அவ்வப்போது மிகவும் சொற்பத் தொகை மட்டுமே ஒதுக்கப்படுவதால் பணிகள் மந்த நிலையில் நடக்கிறது. தேவையான நிதி ஒதுக்கீடு செய்தால் பணிகள் விரைவாக நடக்கும்.
அதேபோல் கன்னியாகுமரி -- திருவனந்தபுரம் இரட்டை அகல ரயில் பாதைத் திட்டத்தை திட்டமிட்டபடி 2025 டிசம்பருக்குள் முடித்தால் திருவனந்தபுரத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு திருநெல்வேலி - மதுரை - திருச்சி - சென்னை செல்லும் வகையில் நேர்வழித் தடமாக இருக்கும். இதனால் மதுரையில் இருந்து வட மாநில நகரங்களுக்கும் நேரடி ரயில் தொடர்பு கிடைக்கும்.