sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் ஜூலை 19, 20ல் சாட்சியாபுரம் ரயில்வே கேட்டை மூடி மாற்றுப் பாதையில் சோதனை ஓட்டம்

/

சிவகாசியில் ஜூலை 19, 20ல் சாட்சியாபுரம் ரயில்வே கேட்டை மூடி மாற்றுப் பாதையில் சோதனை ஓட்டம்

சிவகாசியில் ஜூலை 19, 20ல் சாட்சியாபுரம் ரயில்வே கேட்டை மூடி மாற்றுப் பாதையில் சோதனை ஓட்டம்

சிவகாசியில் ஜூலை 19, 20ல் சாட்சியாபுரம் ரயில்வே கேட்டை மூடி மாற்றுப் பாதையில் சோதனை ஓட்டம்


ADDED : ஜூலை 13, 2024 07:13 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி, : சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில்மேம்பால பணிகள் துவங்க உள்ள நிலையில், ஜூலை 19, 20ல் ரயில்வே கேட்டை மூடி மாற்றுப்பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக அசோகன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

சிவகாசி சட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க ஜன.26ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சிவகாசி இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாண்ட் வரை 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் சுரங்கப் பாதையுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு ரூ.64 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இதையடுத்து தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு சார்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்பந்த புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டு, நேற்று முன்தினம் ஒப்பந்தம் விடப்பட்டது. விரைவில் மேம்பால கட்டுமான பணிகள் தொடங்க உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்றுப்பாதை ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் உடன் அசோகன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அசோகன்எம்.எல்.ஏ., கூறுகையில், கடந்த காலங்களில் 4 முறை மட்டுமே மூடப்பட்ட ரயில்வே கேட் தற்போது தினசரி 21 முறை மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே மேம்பாலம் அமைப்பதற்காக 2021ல் அரசாணை வெளியிடப்பட்டு ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது டெண்டர் விடப்பட்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளது. மேம்பால பணிகள் நடக்கும் போது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மாற்றுப்பாதை ஏற்படுத்துவது குறித்து இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு, கலெக்டர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்துார்-சிவகாசி ரோட்டில்வரும் கனரக வாகனங்கள்தொழிற்பேட்டை, செங்கமலநாச்சியார்புரம், வெள்ளையாபுரம், சுக்கிரவார்பட்டி, வடமலாபுரம் சோதனை சாவடி வழியாக விருதுநகர் ரோட்டில் செல்ல வேண்டும். சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் வாகனங்கள் இதே வழியில் திரும்ப செல்லவேண்டும்.

பஸ்கள் தொழிற்பேட்டை, செங்கமல நாச்சியார்புரம், திருத்தங்கல் ரோடு வழியாக சிவகாசி செல்ல வேண்டும். நகர் பேருந்துகள், கார்கள் தொழிற்பேட்டை, செங்கமல நாச்சியார்புரம், ஓய்.ஆர்.டி.வி பள்ளி ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும்.

சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும்பஸ்கள் விளாம்பட்டி, வேண்டுராயபுரம், துரைசாமிபுரம், சாமிநத்தம் வழியாக ஸ்ரீவில்லிபுத்துார்செல்ல வேண்டும். நகர் பஸ்கள் விளாம்பட்டி சாலை, ஒதப்புளி, ஆணையூர், அரசு கல்லுாரி, ஹவுசிங் போர்டு வழியாக ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு செல்ல வேண்டும்.

அதன்படி ஜூலை 19, 20 இரு நாட்கள் ரயில்வே கேட்டை மூடி மாற்றுப்பாதையில் வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்களுக்கு எதும் பிரச்னை இருந்தால், மேம்பால பணி தொடங்கும் முன் சரி செய்யப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us