/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேன்ஹோலை சீரமைக்காமல் கற்கள், மரம் வைத்து தடுப்பு முயற்சி
/
மேன்ஹோலை சீரமைக்காமல் கற்கள், மரம் வைத்து தடுப்பு முயற்சி
மேன்ஹோலை சீரமைக்காமல் கற்கள், மரம் வைத்து தடுப்பு முயற்சி
மேன்ஹோலை சீரமைக்காமல் கற்கள், மரம் வைத்து தடுப்பு முயற்சி
ADDED : ஏப் 11, 2024 06:26 AM

விருதுநகர்: விருதுநகரில் சாத்துார் - அல்லம்பட்டி ரோட்டில் உள்ள சேதமான மேன்ஹோலை சீரமைக்காமல் கற்கள், மரத்தை நட்டு வைத்து தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் வாகனங்கள் இடறி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகரின் பல பகுதிகளில் பாதாளச்சாக்கடை மேன்ஹோல்கள் சேதமாகி காணப்படுகிறது. இது போன்ற சேதமான மேன்ஹோல்கள் வழியாக கழிவு நீர் வெளியேறி துார்நாற்றம் வீசுகிறது. இவ்வழியாக நடந்து, டூவீலரில், கார், பஸ்சில் செல்பவர்கள் துார்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் விருதுநகரில் சாத்துார் - அல்லம்பட்டி ரோட்டில் உள்ள மேன்ஹோல் சேதமாகி பல நாள்களாகிறது.
இந்த சேதமான மேன்ஹோலை சீரமைக்காமல் கற்களை வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் சேதமான பகுதி வாகன ஓட்டிகளுக்கு தெரிவதற்காக மரத்தை வைத்து உள்ளனர். இவ்வழியாக சைக்கிள், டூவீலரில், காரில் செல்பவர்கள் கற்களில் ஏற்றி டயர் இடறி எதிரே வரும் வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்படுத்துவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கற்கள் பாதாளச்சாக்கடை உள்ளே விழுந்து கழிவு நீர் செல்லமுடியாத அளவிற்கான அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சேதமான மேன்ஹோல்களை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

