ADDED : மே 20, 2026 03:30 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் விவசாயிகளுக்கு சமச்சீர் பயன்பாடு குறித்தான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இது குறித்து கோவிலாங்குளம், செட்டிகுறிச்சி, சிதம்பராபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, காரியாபட்டி, ஆவியூர், அரசகுளம், குரண்டி, திருச்சுழி, கத்தாளம்பட்டி, இறை சின்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாதமாக விழிப்புணர் பிரசாரம் நடந்து வருகிறது.
விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அடிப்படையில் ஆன உர பரிந்துரை பயிருக்கு ஏற்ற ஒரு அளவு இயற்கை, உயிர் உரங்களின் ஒருங்கிணைந்த பயன்பாடு செலவை குறைத்து மகசூலை அதிகரிக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. முதுநிலை விஞ்ஞானி ராமசுப்பிரமணியன் தலைமையில், தொழில்நுட்ப வல்லுனர்கள் கிருஷ்ணகுமார், ஜடா கவிதா, நல்லகுரும்பன், ஆனந்தி, சம்பத்குமார் ஆகியோர் பேசினர்.
