ADDED : ஜூன் 25, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு செவிலியர் கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
மாவட்டம் மனநல திட்டம், ரத்தினம் செவிலியர் கல்லுாரி சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் முருகேஸ்வரன் தலைமை வகித்தார். ஊர்வலத்தை டாக்டர்கள் தர்மராஜன், மகேஸ்வரன் துவக்கி வைத்தனர். செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட ஊர்வலம் தலைமை மருத்துவமனையில் இருந்து துவைத்து பூக்களை பஜார் வழியாக சென்று மருத்துவ வளாகத்தில் முடிவடைந்தது. மனநல சமூகப் பணியாளர் இளையராஜா உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
----
