ADDED : மே 10, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், இயக்குனர்கள், ஏஜெண்ட்டுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களில் அரசு அங்கீகாரம் பெற்ற மனைகள் www.mstcecommerce.com என்ற இணையத்தில் மின்னணு ஏலம் மார்ச் 17 முதல் விடப்படுகிறது. இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் விருதுநகரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு முகாமை நடத்தினர்.
