ADDED : ஏப் 03, 2024 07:02 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் : மாவட்டத்தின் ஊரகப்பகுதிகளில் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற விழிப்புணர்வு வரைபடங்கள் வரையப்பட்டு வருகின்றன.
ஏப். 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் நுாறு சதவீதம் ஓட்டளிப்பதை உறுதி செய்ய மாவட்டத்திலுள்ள ஊரகம், நகர்புறம், பேரூராட்சிகள், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சிவகாசி ஒன்றியம் ஆனையூர் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வரைபடங்கள் வரையப்பட்டுள்ளது.
