தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 24, 2024 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2024 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி என்.என்.எஸ்., விருதுநகர் நகராட்சி இணைந்து 100 சதவிகித ஓட்டுப்பதிவை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயினி துவக்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கி மெயின் பஜார், தேசபந்து மைதானம், மேலரதவீதி, தெப்பம் வழியாக மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் விருதுநகர் தாசில்தார் மகேஷ், நகராட்சி கமிஷனர் லீனா சைமன், கல்லுாரித் தலைவர் பழனிச்சாமி, உப தலைவர்கள் ராஜ்மோகன், ரம்யா, கல்லுாரி செயலாளர் சர்ப்பராஜன், பொருளாளர் சக்திபாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, என்.எஸ்.எஸ்., அதிகாரி செல்வம் உள்பட மாணவர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

ராஜபாளையம்


ராஜபாளையத்தில் தேர்தல் விழிப்புணர்வு டூவீலர் வாகன ஊர்வலம் நடந்தது.

சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கி ராஜபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு முடிந்தது.

கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து கலந்து கொண்டார். பங்கேற்றவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி சமுசிகாபுரம் ஆர்.ஆர்.நகர் வ.உ.சி. நகர், ரயில்வே பாலம், தென்காசி ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், மாடசாமி கோயில் தெரு வழியே தாசில்தார் அலுவலகத்தை அடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us