ADDED : ஏப் 07, 2024 06:15 AM
அ நிறம் | அளவு
சாத்துார் : சாத்துாரில் நுாறு சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரசு அலுவலர்கள் நியாய விலை கடை பணியாளர்கள் பொதுமக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கலெக்டர் ஜெயசீலன் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 100 சதவீதஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. முக்கியவீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது.
பின்னர் கலெக்டர் ஜெயசீலன் பெரியார் நகரில் வசித்து வரும் ராமசாமி தேவர். 99. வீட்டில் இருந்தபடி தனது ஜனநாயக கடமையான ஓட்டை பதிவு செய்தார். அவருடை வீட்டிற்கு சென்ற கலெக்டர் முதியவரை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
