ADDED : மே 06, 2026 11:41 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பில் தீ பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
டீன் ஜெயசிங் தலைமை வகித்து கொடியசைத்து துவங்கி வைத்தார். தீ தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, நிலைய மருத்துவம அலுவலர் வைஷ்ணவி, துணை நிலைய மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் ஜெயக்குமார் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
