ADDED : ஜூன் 26, 2026 11:09 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம், ஜூன் 27-
ராஜபாளையம் நகராட்சி, தாலுகா அலுவலகம் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் ராஜ்குமார் முன்னிலை விகித்தார். ராஜபாளையம் நகராட்சியில் துவங்கிய ஊர்வலம் காந்தி சிலை ரவுண்டானா மகப்பேறு மருத்துவமனை வழியே பழைய பஸ் ஸ்டாண்டில் முடிந்தது.
சுகாதார ஆய்வாளர்கள் காளி, சந்திரசேகர் ,சக்திவேல், வருவாய் துறையினர் கலந்து கொண்டு போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களை முழங்கினர்.
