ADDED : ஜூலை 26, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
போதை குறித்து மாணவர்கள் இளைஞர்களுக்கு ஏற்படுத்தவும், பயன்பாட்டை தவிர்க்கவும் விழிப்புணர்வு நடைபயணம் பெரிய மாரியம்மன் கோயில் முன்பு தொடங்கியது. நிர்வாகிகள் சரவணராஜா, அஜய் வெங்கடேஷ், ஜெயராமன், மாரித்துரை, செல்வி, ஆதிநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் காந்தி கலை மன்றம், ரவுண்டானா, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியே பஞ்சு மார்க்கெட்டில் நிறைவடைந்தது.
