ADDED : ஜூலை 09, 2026 05:30 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் மாணவர்களுக்கு ஏழு நாட்கள் புத்தாக்க விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
மாணவர்களுக்கு உயர்கல்வி உடல்நலம் சைபர் குற்றங்கள் போக்குவரத்து விதி மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடந்த விழிப்புணர்வு பயிற்சி கூட்டத்திற்கு முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை போக்குவரத்து ஆய்வாளர் நவாசுதீன்,, வக்கீல் சதீஷ்குமார் , தீயணைப்பு துறை ஆய்வாளர் வரதராஜன் செயல் விளக்கம் அளித்தனர். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஹரி கிருஷ்ணன், இணை பேராசிரியர் செந்தில்குமார், உதவி பேராசிரியர் வேலவன் தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை பொருளாதாரத்துறை தலைவர் கோபால் செய்தார்.
