/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலால் உதவி ஆணையர் வீட்டில் சோதனை; வங்கி ஆவணங்கள் பறிமுதல்
/
கலால் உதவி ஆணையர் வீட்டில் சோதனை; வங்கி ஆவணங்கள் பறிமுதல்
கலால் உதவி ஆணையர் வீட்டில் சோதனை; வங்கி ஆவணங்கள் பறிமுதல்
கலால் உதவி ஆணையர் வீட்டில் சோதனை; வங்கி ஆவணங்கள் பறிமுதல்
ADDED : மார் 10, 2025 02:42 AM
விருதுநகர் : விருதுநகரில் ரூ.3.75 லட்சத்துடன் காரில் சென்ற மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் கணேசனை போலீசார் விசாரித்த நிலையில் நேற்று அவரது திருச்சி வீட்டில் வங்கி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
திருச்சியை சேர்ந்தவர் கணேசன் 58. இவர் விருதுநகர் மாவட்ட கலால் துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு விருதுநகரில் இருந்து திருச்சிக்கு காரில் சென்றார். அப்போது சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் காரை சோதனையிட்டனர். அதில் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் இருப்பது தெரிந்தது.
அவரை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். நள்ளிரவு வரை விசாரணை தொடர்ந்த பின் அவரை வீட்டிற்கு அனுப்பினர். தனியார் மதுக்கூடங்கள், மெத்தனால் பயன்படுத்தும் நிறுவனங்களில் இருந்து பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு சொந்த ஊர் செல்வதாக விசாரணையில் தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்த நிலையில், நேற்று அவரது திருச்சி வீட்டில் அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் வங்கி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.