ADDED : ஜூன் 08, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூன் 9-
ஸ்ரீவில்லிபுத்துார் நத்தம்பட்டி பகுதியில் கோயில் உண்டியல், தோட்டத்து பம்ப்செட் மோட்டார் ஸ்டார்ட்டரை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஜூன் 5ல் நல்லுார்பட்டி பாண்டி கோயிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காசிராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் மோட்டருக்கு பயன்படுத்தும் ஸ்டார்ட்டரும் திருடப்பட்டிருந்தது.
இது சம்பவங்கள் குறித்து நத்தம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதில் கூமாபட்டியைச் சேர்ந்த தினேஷ் 27, இலந்தகுளத்தை சேர்ந்த முருகன் 22, ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
