/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிரசாரம், பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு ; ஸ்டேஷன் பணிகளுக்கு ஆள்கள் இல்லாமல்
/
பிரசாரம், பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு ; ஸ்டேஷன் பணிகளுக்கு ஆள்கள் இல்லாமல்
பிரசாரம், பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு ; ஸ்டேஷன் பணிகளுக்கு ஆள்கள் இல்லாமல்
பிரசாரம், பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு ; ஸ்டேஷன் பணிகளுக்கு ஆள்கள் இல்லாமல்
ADDED : மார் 25, 2024 06:50 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம், பொதுக் கூட்டத்திற்கு வரும் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து ஸ்டேஷன்களிலும் இருந்து செல்ல வேண்டியுள்ளதால் ஸ்டேஷன் பணிகளுக்கு ஆள்கள் இல்லாமல் போலீசார் பரிதவித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது. இதனை அடுத்து வேட்பாளர் அறிமுக கூட்டம், பிரசாரம், பொதுக்கூட்டங்கள் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்தும் போலீசார் அழைத்து செல்லப்படுகின்றனர். இதனால் ஸ்டேஷனில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் நடக்கும் திருட்டு சம்பவத்தை விசாரிக்க செல்லும் போது அடுத்ததாக வாகன விபத்து நடந்தால் அதையும் விசாரித்து முடிப்பதற்குள் பழைய வழக்கில் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான ஆவணங்களை தயாரித்து அதை முடிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். வாகன விபத்துக்கள் நடந்தால் அது குறித்து விசாரிப்பதற்காக செல்லும் போலீசார் பணி முடிந்து வந்து பாதுகாப்பு பணிக்காக சென்றிருக்கும் போலீசாரின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
மேலும் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் ஏதேனும் அசாம்பாவிதம் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். லோக்சபா தேர்தல் பணிக்காக அதிக அளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ளது.
மேலும் பிரசாரம், பொதுக்கூட்டங்களுக்கு அளவுக்கு அதிகமாக போலீசார் குவிக்கப்படுவதால் தான் ஸ்டேஷனில் பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரவு ரோந்து, வாகன சோதனை, குட்கா கடத்தல் ஆகியவற்றை இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள் இரவு பகலாக இரட்டை பணி செய்து கண்காணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே ஸ்டேஷன் பணிகள் பாதிக்கப்படுவதையும், போலீசாருக்கு பணிச்சுமை ஏற்படுவதை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

