தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அலுவலர்கள் குளறுபடி:ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடும் மக்கள்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அலுவலர்கள் குளறுபடி:ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடும் மக்கள்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அலுவலர்கள் குளறுபடி:ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடும் மக்கள்


UPDATED : செப் 29, 2026 04:24 PM

ADDED : செப் 29, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 04:24 PM ADDED : செப் 29, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் பட்டியலில் குளறுபடி நடப்பதால் வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகை இடுகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் முதல் 125 நாட்கள் பணி வழங்கப்படுகிறது. மக்களின் கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு இந்த வேலை அவசியமாகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதால் மக்களுக்கு முழுமையான பணி கிடைப்பது இல்லை. பணிக்கு எடுக்கப்படும் ஆட்கள் அலைபேசி மூலம் வருகை பதிவு , போட்டோ எடுப்பது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரச்சனை ஏற்படுகிறது.

இதனால் பல ஊராட்சிகளில் வேலைக்கு வராத நபர்களுக்கு வருகை பதிவு , புகைப்படங்கள் எடுக்கப்பட்டு முறைகேடு செய்யப்படுவதாக பாதிக்கப்பட்டோர் புலம்புகின்றனர்.

இதேபோன்று அரசு நிர்ணயித்த முழு தொகையை தொழிலாளரின் கணக்குக்கு செல்வது இல்லை வேலை செய்யும் அளவை சரியாக கணக்கிடாததாலும் குறைந்தபட்ச கூலியே வழங்கப்படுகிறது. இதேபோன்று நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், ஏழை மக்கள் வேலை இன்றி அவதிப்படுகின்றனர்.

அருப்புகோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சியில் 100 நாள் பணி குறைவான நாட்களில் தான் வழங்கி உள்ளனர். தற்போது 125 நாளாக பணி நாட்கள் உயர்த்த பட்டும் குறைவான நாட்கள் தான் பணிகள் வழங்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கூடுதல் நாட்கள் வேலை வழங்க வேண்டும் என, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுகின்றனர். இதே போன்று பாலவநத்தம் பகுதியில் 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி அலுவலகத்தை ஆர்ப்பாட்டம் செய்தனர். கிராம சபை கூட்டங்கள் நடக்கிற போது இந்த கோரிக்கை தொடர்ந்து எழுகிறது.

100 நாள் வேலை தொடர்பாக பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகை இடுவது அடிக்கடி நடக்கிறது.

இந்தத் திட்டத்தில் அதிகாரிகள் முழுமையான கவனம் செலுத்துவதில்லை. கள ஆய்வாளர்களும் பாரபட்சமின்றி செயல்படுவது இல்லை. இதனால், வேலை கிடைக்காமல் பலர் உள்ளனர்.

தற்போது கண்மாய் வெட்டு, ஊருணி வெட்டி பணிகளை செய்யும் போது மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, முறையான பணி செய்வதற்கான அளவுகள் கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட அளவு ஒரு நாளில் செய்து முடிக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. செய்து முடிக்கின்ற பணிக்கு ஏற்ப கூலி வழங்கப்படுகிறது. பணி செய்யும் பயனாளிகளும் ஏனோ தானோ என்று செய்வதால் முழுமையான கூலியை பெற முடிவதில்லை. இதனால் பயனாளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு ஒன்றிய அலுவலகங்களை முற்றுகை இடுகின்றனர்.

மத்திய மாநில அரசுகளின் புதிய விதிகளை பயனாளிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் 100 நாள் வேலை செய்யும் பயனாளிகளுக்கு, புதிய விதிகள், செய்யப்படும் வேலையின் அளவு, வேலைக்கான கூலி ஆகியவற்றை தெளிவாக விளக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்..

----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us