/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும்: நடிகர் சரத்குமார் பேச்சு

ADDED : செப் 01, 2024 11:56 PM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
விருதுநகரில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை, கலந்தாய்வு கூட்டம் மாவட்டத் தலைவர்கள் பாண்டுரங்கன், ராஜா தலைமையில் நடந்தது. மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், கஜேந்திரன், சுந்தர் ஈஸ்வரன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் சரத்குமார் பேசியதாவது:
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் நடக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட தலைவர்கள் பலர் உறுப்பினர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், என்றார்.