/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அண்ணன் கொலை: தம்பிக்கு 10 ஆண்டு சிறை
/
அண்ணன் கொலை: தம்பிக்கு 10 ஆண்டு சிறை
ADDED : மார் 04, 2025 06:49 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சொத்து தகராறில் அண்ணன் ஈஸ்வரனை43, இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தம்பி கணேசனுக்கு 40, பத்து ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். ஹாக்கி கோல்கீப்பர் ஆகவும், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். இவரது தம்பி கணேசன் கூலித் தொழிலாளி.
அப்பகுதியில் உள்ள அம்மாவின் வீட்டிற்கு ஈஸ்வரன் வந்து தங்கி செல்வார். அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி வாங்கி விடுவாரோ என கணேசனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 2023 ஜூலை 2 இரவு தாயார் வீட்டில் ஈஸ்வரன் இருந்தபோது இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் இரும்பு கம்பியால் அடித்து ஈஸ்வரனை கணேசன் கொலை செய்தார். ராஜபாளையம் வடக்கு போலீசார் கணேசனை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. கணேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.