ADDED : மே 31, 2026 07:10 PM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசியில் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு மோர் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 10வது வாரமாக மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை ரயில் பயணிகளுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் நிர்வாகிகள் தனசேகரன், பன்னீர்செல்வம் ஏற்பாடுகளை செய்தனர்.
ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் நிர்வாகி சுரேஷ் தர்கார் கூறுகையில், கோடை காலத்தை முன்னிட்டு ரயில் வருகின்ற பயணிகளுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது. ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் விற்பனை, பயணிகளின் அதிக பயன்பாட்டினை கருத்தில் கொண்டு அம்ரித் பாரத் ரயில்வே ஸ்டேஷனாக மேம்படுத்தவும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது, என்றார்.
