தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இடுபொருட்கள் பெற அழைப்பு

இடுபொருட்கள் பெற அழைப்பு

இடுபொருட்கள் பெற அழைப்பு


ADDED : செப் 15, 2024 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : வேளாண் இணை இயக்குனர் விஜயா செய்திக்குறிப்பு: மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பருவ காலம் துவங்கியுள்ளதால் வட்டாரங்களில் ஆங்காங்கே மழை பொழிந்து வருகிறது.

சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், நுண்ணுாட்ட கலவைகள், உயிர் உரங்கள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஏ.டி.எம்., கார்டு, கூகுள் பே, போன்பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் கொண்ட பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தி பெறலாம்.

எனவே வேளாண் விரிவாக்க மையம் மூலம் இடுபொருட்களை வாங்க வரும் விவசாயிகள் இடுபொருட்களுக்கான முழுத்தொகை அல்லது பங்களிப்பு தொகையை செலுத்தி வேளாண் இடுபொருட்களை பெற்று பயனடையலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us