ADDED : ஜூன் 03, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
நரிக்குடி: நரிக்குடி அழகிய மீனாள் கோயில் திருவிழா நடந்தது.
அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டன. முக்கிய நிகழ்ச்சியாக குத்து விளக்கு பூஜை நடந்தது. நுாற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை போற்றி துதி பாடி மனம் உருகி வேண்டி, குத்துவிளக்கு ஏற்றினர். பொங்கல் வைத்து, சக்தி விநாயகர் கோயிலில் கரகம் எடுத்து வழிபட்டனர். பூச்சொரிதல் விழாவில் அழகிய மீனாள் அம்பாளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தேரில் சர்வ அலங்காரத்துடன் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
