ADDED : ஜூலை 14, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 15-
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சுந்தர பாண்டியத்தை சேர்ந்தவர் ஞானசுந்தரி 55, இவர் ஜூன் 30ல் சென்னையில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் கேட்டை உடைத்து, முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருடப்பட்டது. பீரோ உடைக்கப்பட்டிருந்தாலும் அதில் ஒன்றும் திருடுபோகவில்லை.
அக்கம் பக்கத்தினர் சொன்ன தகவலின்பேரில் சென்னையில் இருந்து ஊர் திரும்பிய ஞானசுந்தரி, கிருஷ்ணன் கோவில் போலீசார் மோப்பநாய் பிரிவு மற்றும் தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் அதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி 26, என்பவரை கைது செய்து, காரை மீட்டனர்.
