ADDED : மே 27, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்;
சாத்துார் ஒன்றியம் அயன்சத்திரப்பட்டி ஒ.பி.ஆர்.
தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமென்ட் ரோடு கற்கள் பெயர்ந்து மோசமாக, கரடு முரடாக இருந்தது. இங்கு வாறுகால் வசதியின்றி சுகாதாரக் கேடும் இருந்தது. இத்தெரு வழியாக டூவீலரில் துணை சுகாதார நிலையத்திற்கு செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. இது குறித்து தினமலர் சூப்பர் ரிப்போர்டர் பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஓ.பி.ஆர் தெரு, குறுக்கு தெருவில் சேதம் அடைந்த சிமென்ட் ரோடு அகற்றப்பட்டு புதியதாக சிமென்ட் ரோடு போடப்பட்டது. வாறுகாலும் சீரமைக்கப்பட்டுள்ளது.

