தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரோடு அகலப்படுத்தும் பணிக்காக நூற்றாண்டு மரங்கள் வெட்டி சாய்ப்பு

ரோடு அகலப்படுத்தும் பணிக்காக நூற்றாண்டு மரங்கள் வெட்டி சாய்ப்பு

ரோடு அகலப்படுத்தும் பணிக்காக நூற்றாண்டு மரங்கள் வெட்டி சாய்ப்பு


ADDED : ஜூன் 07, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 08:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ரோடு அகலப்படுத்தும் பணிக்காக 100 ஆண்டுகளைக் கடந்த மரங்கள் வெட்டி சாய்ப்பதில் இருக்கும் வேகம் மரக்கன்றுகளை வைப்பதிலும் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தத்திலிருந்து அருப்புக்கோட்டை புறவழிச் சாலை வரையிலும், காந்திநகரிலிருந்து ராமலிங்காமில் வரையுள்ள மொத்தம் 12 கி.மீ., ரோடு இருபுறமும் அகலப்படுத்தப்படுவதற்காக 72 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. முதற் கட்டமாக ரோட்டின் இருபுறமும் 100 ஆண்டுகளை கடந்த மரங்களை வெட்டுவதற்கு உரிய அனுமதி பெற்று, வெட்டும் பணி நடந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளன. காந்தி நகரில் இருந்து ராமலிங்கா மில் வரை ரோட்டில் இருபுறமும் மரங்கள் வளர்ந்து குளுகுளு சூழலில் இருந்தது. தற்போது ரோட்டை அகலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவதை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மரங்களை வெட்டுவதில் இருக்கும் வேகம், அதேபோன்று 3 மடங்காக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us