/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயங்கரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: மாணிக்கம் தாகூர் எம்.பி., பேட்டி

ADDED : மே 22, 2024 07:37 AM
விருதுநகர் : இந்தியாவில் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பிற்கும் இடமில்லை என்ற மத்திய அரசின் முடிவின் வரவேற்கத்தக்கது என மாணிக்கம் தாகூர் எம்.பி., தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் பிரதமர் மோடி என பொய் பிரசாரம் செய்து ஓட்டுக்களை பெற எதிர்கட்சிகள் முயல்வதாக அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் கூறுவது தவறு. இண்டியா கூட்டணி கட்சிகள் பிரசாரத்தின் போது எந்த இடத்திலும் இஸ்லாமியர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., விற்கு புதிய விசுவாசியாக தினகரன் மாறியுள்ளார். முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் தோளோடு தோள் நிற்பார்கள். விடுதலை புலிகள் அமைப்பிற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் எந்த ஒரு பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடமில்லை என்பதை மத்திய அரசு மீண்டும் சுட்டி காட்டியிருக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் அனைத்து இந்தியர்களும் மத்திய அரசின் முடிவை வரவேற்பர். திரைத்துறையினர் போதைப் பொருள் உபயோகிப்பது குறித்து ஆய்வு செய்வது அத்துறையில் இருப்பவர்களின் முக்கியமான கடமை, என்றார்.