/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழி அம்மன்பட்டிக்கு பின்கோடு எண் மாற்றம்
/
திருச்சுழி அம்மன்பட்டிக்கு பின்கோடு எண் மாற்றம்
ADDED : ஜூன் 15, 2024 07:07 AM
விருதுநகர்: முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவில் அமைந்துள்ள அம்மன்பட்டி இதுவரை கமுதி தாலுகாவிற்கு கீழ் வரும் 623603 என்ற பின்கோடு கொண்ட பெருமாள்தேவன்பட்டி என்ற கிளை அஞ்சலகத்தின் மூலம் தபால் சேவையை பெற்று வந்தது. ஜூன் 18 முதல் அம்மன்பட்டி கிராமம் திருச்சுழி துணை அஞ்சலகத்திற்கு கீழ் இயங்கும் 626 129 என்ற பின்கோடு கொண்ட இலுப்பையூர் கிளை அஞ்சலகத்துடன் இணைக்கப்படும். மேலும் அம்மன்பட்டிக்கு வரும் தபால்கள் அனைத்தும் ஜூன் 18 முதல் இலுப்பையூர் கிளை அஞ்சலகத்தின் மூலம் பட்டுவாடா செய்யப்படும்.
எனவே மக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு கீழ் வரும் அம்மன்பட்டி என்ற கிராமத்திற்கு 626 129 என்ற பின்கோடு எண்ணை பயன்படுத்த வேண்டும், என்றார்.