ADDED : மே 08, 2026 11:23 PM
அ நிறம் | அளவு
சிவகாசி, மே 9-
சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
இக்கோயில் திருவிழா ஏப். 28 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் காமதேனு, கைலாச பர்வத, வேதாள, யானை, ரிஷப உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடந்தது. விழாவில் பொங்கல் வழிபாடு, கயர் குத்து திருவிழா நடந்தது. இந்நிலையில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
